On Love › Secret Love
அதிகாரம் 115
அலர் அறிவுறுத்தல்
On Love · Secret Love
- 01 குறள் 1141
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால்.
Rumour sustains my existence Good luck! many know not its sense
விரிவாகப் படிக்க → - 02 குறள் 1142
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
Rumour gives me the flower-like belle People know not what rare angel
விரிவாகப் படிக்க → - 03 குறள் 1143
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
I profit by this public rumour Having not, I feel, I have her
விரிவாகப் படிக்க → - 04 குறள் 1144
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து.
Rumour inflames the love I seek Or else it becomes bleak and weak
விரிவாகப் படிக்க → - 05 குறள் 1145
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது.
Drink delights as liquor flows Love delights as rumour grows
விரிவாகப் படிக்க → - 06 குறள் 1146
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று.
One lasting day we met alone Lasting rumours eclipse our moon
விரிவாகப் படிக்க → - 07 குறள் 1147
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய்.
Scandal manures; mother's refrain Waters the growth of this love-pain
விரிவாகப் படிக்க → - 08 குறள் 1148
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல்.
To quench the lust by rumour free Is to quench fire by pouring ghee
விரிவாகப் படிக்க → - 09 குறள் 1149
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை.
Who said \"fear not\" flared up rumour Why then should I blush this clamour?
விரிவாகப் படிக்க → - 10 குறள் 1150
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கெளவை எடுக்கும்இவ் வூர்.
Town raising this cry, I desire Consent is easy from my sire
விரிவாகப் படிக்க →