On Wealth & Statecraft › Kingship
அதிகாரம் 041
கல்லாமை
On Wealth & Statecraft · Kingship
- 01 குறள் 401
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்.
Like play of chess on squareless board Vain is imperfect loreless word
விரிவாகப் படிக்க → - 02 குறள் 402
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று.
Unlearned man aspiring speech Is breastless lady's love-approach
விரிவாகப் படிக்க → - 03 குறள் 403
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின்.
Ev'n unread men are good and wise If before the wise, they hold their peace
விரிவாகப் படிக்க → - 04 குறள் 404
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார்.
The unread's wit though excellent Is not valued by the savant
விரிவாகப் படிக்க → - 05 குறள் 405
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்.
A man untaught when speech he vaunts Sadly fails before savants
விரிவாகப் படிக்க → - 06 குறள் 406
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர்.
People speak of untaught minds \"They just exist like barren lands\"
விரிவாகப் படிக்க → - 07 குறள் 407
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று.
Like painted clay-doll is his show Grand subtle lore who fails to know
விரிவாகப் படிக்க → - 08 குறள் 408
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட் ட திரு.
Wealth in the hand of fools is worse Than a learned man's empty purse
விரிவாகப் படிக்க → - 09 குறள் 409
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு.
Lower are fools of higher birth Than low-born men of learning's worth
விரிவாகப் படிக்க → - 10 குறள் 410
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்.
Like beasts before men, dunces are Before scholars of shining lore
விரிவாகப் படிக்க →