On Wealth & Statecraft › Civic Conduct
அதிகாரம் 099
சான்றாண்மை
On Wealth & Statecraft · Civic Conduct
- 01 குறள் 981
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
All goodness is duty to them Who are dutiful and sublime
விரிவாகப் படிக்க → - 02 குறள் 982
குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
Good in the great is character Than that there is nothing better
விரிவாகப் படிக்க → - 03 குறள் 983
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண்.
Love, truth, regard, modesty, grace These five are virtue's resting place
விரிவாகப் படிக்க → - 04 குறள் 984
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு.
Not to kill is penance pure Not to slander virtue sure
விரிவாகப் படிக்க → - 05 குறள் 985
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை.
Humility is valour's strength A force that averts foes at length
விரிவாகப் படிக்க → - 06 குறள் 986
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல்.
To bear repulse e'en from the mean Is the touch-stone of worthy men
விரிவாகப் படிக்க → - 07 குறள் 987
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு.
Of perfection what is the gain If it returns not joy for pain?
விரிவாகப் படிக்க → - 08 குறள் 988
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மை உண் டாகப் பெறின்.
No shame there is in poverty To one strong in good quality
விரிவாகப் படிக்க → - 09 குறள் 989
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்.
Aeons may change but not the seer Who is a sea of virtue pure
விரிவாகப் படிக்க → - 10 குறள் 990
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை.
The world will not more bear its weight If from high virtue fall the great
விரிவாகப் படிக்க →