On Virtue › Domestic Virtue
அதிகாரம் 013
அடக்கமுடைமை
On Virtue · Domestic Virtue
- 01 குறள் 121
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.
Self-rule leads to realms of gods Indulgence leads to gloomy hades
விரிவாகப் படிக்க → - 02 குறள் 122
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
No gains with self-control measure Guard with care this great treasure
விரிவாகப் படிக்க → - 03 குறள் 123
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்.
Knowing wisdom who lives controlled Name and fame seek him untold
விரிவாகப் படிக்க → - 04 குறள் 124
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.
Firmly fixed in self serene The sage looks grander than mountain
விரிவாகப் படிக்க → - 05 குறள் 125
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து.
Humility is good for all To the rich it adds a wealth special
விரிவாகப் படிக்க → - 06 குறள் 126
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து.
Who senses five like tortoise hold Their joy prolongs to births sevenfold
விரிவாகப் படிக்க → - 07 குறள் 127
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
Rein the tongue if nothing else Or slips of tongue bring all the woes
விரிவாகப் படிக்க → - 08 குறள் 128
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்.
Even a single evil word Will turn all good results to bad
விரிவாகப் படிக்க → - 09 குறள் 129
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு.
The fire-burnt wounds do find a cure Tongue-burnt wound rests a running sore
விரிவாகப் படிக்க → - 10 குறள் 130
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
Virtue seeks and peeps to see Self-controlled savant anger free
விரிவாகப் படிக்க →