On Wealth & Statecraft › Kingship
அதிகாரம் 044
குற்றங்கடிதல்
On Wealth & Statecraft · Kingship
- 01 குறள் 431
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து.
Plenty is their prosperity Who're free from wrath pride lust petty
விரிவாகப் படிக்க → - 02 குறள் 432
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு.
Mean pride, low pleasure, avarice These add blemishes to a prince
விரிவாகப் படிக்க → - 03 குறள் 433
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்.
Though millet-small their faults might seem Men fearing disgrace, Palm-tall deem
விரிவாகப் படிக்க → - 04 குறள் 434
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை.
Watch like treasure freedom from fault Our fatal foe is that default
விரிவாகப் படிக்க → - 05 குறள் 435
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.
Who fails to guard himself from flaw Loses his life like flame-lit straw
விரிவாகப் படிக்க → - 06 குறள் 436
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு?
What fault can be the king's who cures First his faults, then scans others
விரிவாகப் படிக்க → - 07 குறள் 437
செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும்.
That miser's wealth shall waste and end Who would not for a good cause spend
விரிவாகப் படிக்க → - 08 குறள் 438
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று.
The gripping greed of miser's heart Is more than fault the worst apart
விரிவாகப் படிக்க → - 09 குறள் 439
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை.
Never boast yourself in any mood Nor do a deed that does no good
விரிவாகப் படிக்க → - 10 குறள் 440
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல்.
All designs of the foes shall fail If one his wishes guards in veil
விரிவாகப் படிக்க →