ஒரு அழகான கிராமத்தில் கதிர் மற்றும் மாறன் என்ற இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரு சிறிய விவசாயத் தோட்டம் வைத்திருந்தார்கள். ஒரு நாள், பக்கத்துத் தோட்டக்காரர் தற்செயலாக கதிரின் பயிர்களைச் சேதப்படுத்தினார். இதைக் கண்ட மாறன் ஆத்திரமடைந்தான். 'அவன் வேண்டுமென்றே செய்திருக்கிறான்! நாம் அவனிடம் போய் சண்டையிட வேண்டும், அவனது தோட்டத்தையும் நாமே சேதப்படுத்த வேண்டும்!' என்று கத்தினான்.
ஆனால் கதிர் அமைதியாக இருந்தான். 'மாறா, சண்டை போட்டால் நமக்குக் கிடைப்பது வெறும் கோபம் மட்டும்தான். நாம் நம் வேலையைச் சரியாகச் செய்வோம், அதுவே அவனுக்குப் பதிலாக இருக்கும்' என்றான்.
மாறன் கோபத்துடன் கதிரைப் பிரிந்து சென்றான். அவன் தினமும் அந்தத் தோட்டக்காரரைப் பற்றிப் பேசிக்கொண்டும், அவரோடு சண்டையிடத் திட்டமிட்டுக் கொண்டும் நேரத்தையும் சக்தியையும் வீணாக்கினான். இதனால் மாறனின் கவனம் சிதறியது, அவனது பயிர்கள் காய்ந்து போயின.
ஆனால் கதிர், அந்தச் சம்பவத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. அவன் தன் வேலையில் முழு கவனத்தையும் செலுத்தினான். காலப்போக்கில், கதிரின் தோட்டம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து செழித்தது. மாறன் தன் தவறை உணர்ந்தான். கோபத்தைத் தவிடுபொடியாக்கிய கதிர் முன்னேறினான்; கோபத்தைத் வளர்த்த மாறன் வீழ்ந்தான்.